தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2023-06-19 00:30 IST

திசையன்விளை:

திசையன்விளை அருகே ஆனைகுடி பெருமாள்புரத்தை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 55). தொழிலாளி. இவரது மனைவி மற்றும் குழந்தைகள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுவிட்டனர். இதனால் தனிமையில் இருந்து வந்த தர்மராஜ் வீட்டில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தம்பி கார்த்தீசன் திசையன்விளை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்