தீக்குளித்து தொழிலாளி தற்கொலை

கோபால்பட்டி அருகே உள்ள சாமிநாதபுரத்தை சேர்ந்த தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2022-09-16 00:11 IST

கோபால்பட்டி அருகே உள்ள சாமிநாதபுரத்தை சேர்ந்தவர் முத்துச்்சாமி (வயது 37). கூலித்தொழிலாளி. நேற்று மதியம் இவர், வீட்டில் யாரும் இல்லாத போது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள், அவரை பரிசோதனை செய்த போது ஏற்கனவே முத்துச்சாமி இறந்தது தெரியவந்தது.

இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, முத்துச்சாமி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முத்துசாமிக்கு திருமணமாகி, அன்னபூரணி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags:    

மேலும் செய்திகள்