விபத்தில் தொழிலாளி சாவு

பாப்பிரெட்டிப்பட்டி அருகே விபத்தில் தொழிலாளி இறந்தார்.;

Update:2023-05-28 00:15 IST

பாப்பிரெட்டிப்பட்டி

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மெனசி ஜீவா நகரை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 48). கட்டிட தொழிலாளி. இவருக்கு ராஜாத்தி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். தமிழ்செல்வன் நேற்று காலை ஆலாபுரம் ஏரிக்கரை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மயக்கம் அடைந்த அவர், மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தமிழ்செல்வன் பலியானார். இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்