கருப்பூரில் ரெயிலில் அடிபட்டு தொழிலாளி பலி
கருப்பூரில் ரெயிலில் அடிபட்டு தொழிலாளி பலியானார்.;
கருப்பூர்:
சேலம் கருப்பூர் 8-வது வார்டு கொல்லத்தெருவில் வசித்து வந்தவர் தங்கம் (வயது 58), கூலித்தொழிலாளி. இவர் நேற்று மாலை கருப்பூர் கடைவீதிக்கு சென்று விட்டு பின்னர் ரெயில்வே கேட் வழியாக தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சேலத்தில் இருந்து சென்னைக்கு சென்ற பயணிகள் ரெயில் எதிர்பாராதவிதமாக அவர் ெரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர். பலியான தங்கத்திற்கு, காளியம்மாள் என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.