மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.;

Update:2023-02-04 00:46 IST

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 55). கூலி தொழிலாளி. இவர் தனது வீட்டில் மின் இணைப்பில் பிரச்சினை ஏற்பட்டதால் அதை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென மின்சாரம் தாக்கி பெரியசாமி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெரியசாமியின் உடலை மீட்டு அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்