வேளாண்மை துறை பணியை உலக வங்கி குழு ஆய்வு

செங்கோட்டையில் வேளாண்மை துறை பணியை உலக வங்கி குழு ஆய்வு செய்தது

Update: 2022-09-22 18:45 GMT

செங்கோட்டை:

உலக வங்கியின் நிதியுதவியுடன் நீர் வளம், நில வளம் என்ற திட்டத்தினை தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உலக வங்கி நிதி உதவியால் வேளாண்மை துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிகளை ஆய்வு செய்வதற்காக உலக வங்கி நிபுணர் குழு வருகை தந்தது.

உலகவங்கியின் நீர் மேலாண்மை சிறப்பு நிபுணர் ஜூப்ஸ்டோட்ஜீஸ்டிக் மற்றும் சுற்றுச்சூழல் ஆலோசகர் வனிதா ஹோம்ரூனு ஆய்வை மேற்கொண்டனர். முதலாவதாக செங்கோட்டை வட்டாரம் இலத்தூர் கிராமத்தில் பெரியகுளத்தில் ஒட்டுமொத்த பின்விளைவு சாகுபடி திடலான தக்கைபூண்டு திடல்களை பார்வையிட்டனர். முக்கிய முன்னோடி விவசாயிகளிடம் கலந்து ஆலோசனை செய்தனர். அதனைத் தொடர்ந்து செங்கோட்டை கீழூர் கலங்காதகண்டி கால்வாய் பாசன பகுதியில் திருந்திய நெல் சாகுபடி திடல்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது சென்னையில் இருந்து பயிர் நிபுணர் சிவக்குமார், கிருஷ்ணன், பொறியாளர் சந்திரசேகரன், விஜய்சாகர், விஜயராம்,  ஜூடித் டி சில்வா உடன் வருகை தந்தனர். தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்மலர் மற்றும் துணை இயக்குனர் நல்லமுத்துராஜா உலகவங்கி நிபுணர் குழுவிற்கு துறை ரீதியாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை பற்றி விளக்கிக் கூறினார்கள். வேளாண்மை உதவி இயக்குனர் கனகம்மாள், செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் ஷேக்முகைதீன் செங்கோட்டை வட்டாரத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் பற்றி அறிக்கை சமர்ப்பித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்