உலக தாய்ப்பால் வாரவிழா விழிப்புணர்வு ஊர்வலம்

உலக தாய்ப்பால் வாரவிழா விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.;

Update:2023-08-05 01:05 IST

உலக தாய்ப்பால் வாரவிழாவை முன்னிட்டு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் உப்பிலியபுரத்தில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் தாய்ப்பாலின் சிறப்புகள், சத்துக்கள். நோய்எதிர்ப்புத் தன்மை, குழந்தைகளின் உடல் வளர்ச்சி, ஆரோக்கியம் உள்ளிட்ட வாசகம் எழுதிய பதாகைகளை தூக்கி சென்றனர். இதில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் இருசக்கர வாகனத்தில் வெங்கடாசலபுரத்திலிருந்து உப்பிலியபுரம் அண்ணாசிலை வரை அணிவகுத்து சென்றனர். குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் நவீனாரெட்டி தலைமை தாங்கினார். இதில் ஒன்றியகுழு தலைவர் ஹேமலதாமுத்துச்செல்வன், வட்டார மேற்வையாளர் வசந்தா, ஒருங்கிணைப்பாளர் காயத்ரி மற்றும்் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்