உலக சுற்றுச்சூழல் தின விழா

சங்கர்நகர் சங்கர் மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது.;

Update:2023-06-07 02:23 IST

சங்கர்நகர் சங்கர் மேல்நிலைப்பள்ளியில் தேசிய பசுமை படை, குடிமக்கள் நுகர்வோர் மன்றம், நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் உ.கணேசன் தலைமை தாங்கினார். தேசிய பசுமைப்படை மற்றும் குடிமக்கள் நுகர்வோர் மன்ற திட்ட அலுவலர் கணபதி சுப்பிரமணியன் வரவேற்று பேசினார். உதவி தலைமை ஆசிரியர் ஆ.ரெங்கநாதன் முன்னிலை வகித்தார். பள்ளிச் செயலாளர் மற்றும் இந்தியா சிமெண்ட்ஸ் ஆலை முதுநிலை மேலாளர் (மனித வளம்) இரா.நாராயணசாமி, பள்ளி நிர்வாக அதிகாரி ஆர்.வி.சீனிவாசன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர். பட்டதாரி ஆசிரியை முத்துமாரி மற்றும் பலர் கலந்து கொண்டனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சொ.உடையார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்