உலக காசநோய் விழிப்புணர்வு ஊர்வலம்

உலக காசநோய் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.;

Update:2023-03-24 20:20 IST

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு நேற்று திருச்சி ரெயில்வே ஜங்ஷனில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை திருச்சி நிலைய மேலாளர் டேவிட் ஞானராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் திருச்சி ரெயில் நிலையத்தில் உள்ள அனைத்து பிளாட் பாரத்திலும் சென்று அங்கு உள்ள ரெயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

இதில் திருச்சியில் இருந்து சென்னை வரை செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் உள்ள பயணிகளிடம் காசநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஊர்வலத்தில் தலைமை சுகாதார ஆய்வாளர் கல்யாண சுந்தரம், ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் நவநீதகிருஷ்ணன், லட்சுமி, தலைமை நிலைய டிக்கெட் பரிசோதகர் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்