ரூ.2 கோடிக்கு மஞ்சள் ஏலம்

திருச்செங்கோட்டில் ரூ.2 கோடிக்கு மஞ்சள் ஏலம் போனது.;

Update:2023-03-19 00:15 IST

எலச்சிபாளையம்

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது. விரலி மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.6 ஆயிரத்து 663 முதல் ரூ.7 ஆயிரத்து 689 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.5 ஆயிரத்து 769 முதல் ரூ.6 ஆயிரத்து 509 வரையிலும், பனங்காளி மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரத்து 22 முதல் ரூ.10 ஆயிரத்து 669 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் 5 ஆயிரம் மஞ்சள் மூட்டைகள் ரூ.2 கோடிக்கு விற்பனை ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்