தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சமையலர், சலவையாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சமையலர், சலவையாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.;

Update:2022-09-28 00:15 IST

தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள 5 சமையலர், 6 சலவையாளர் பணியிடங்களுக்கு இனசுழற்சி முறையில் ஆண், பெண்களிடம் இருந்து தனித்தனியே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி சான்றிதழ்கள், சாதி சான்றிதழ்கள், இருப்பிட சான்றிதழ் ஆகியவற்றுக்கான நகல்கள் இணைக்க வேண்டும். தேவையான சான்றிதழ்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விண்ணப்பங்களை முதல்வர், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தூத்துக்குடி என்ற முகவரிக்கு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணி வரை அனுப்பி வைக்கலாம். அதன்பிறகு கிடைக்க பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்