கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
திருநாகேஸ்வரத்தில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.;
திருவிடைமருதூர்;
கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் சந்தன மாரியம்மன் கோவில் பின்புறம் ஒருவர் கஞ்சா வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்றனர். அப்போது திருநாகேஸ்வரம் சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த துரைசாமி என்பவர் மகன் மணிகண்டன் (வயது 26) 300 கிராம் கஞ்சாவை வைத்து இருந்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்