பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

ஆலங்குளம் அருகே பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-08-16 23:52 IST

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலை முப்புடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர் மகன் ராதாகிருஷ்ணன் (வயது 34). இவர் அப்பகுதியில் உள்ள காற்றாலையில் தொழிலாளியாக வேைல செய்து வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து 6 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் ராதாகிருஷ்ணனுக்கும், பள்ளி மாணவி ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி ராதாகிருஷ்ணன் நெருங்கி பழகியுள்ளார். இதில் மாணவி கர்ப்பம் அடைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாயார், இதுபற்றி ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் ராதாகிருஷ்ணனை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பாளையங்கோட்ைட மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்