வாளுடன் பதுங்கிய வாலிபர் கைது

மதுரையில் வாளுடன் பதுங்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-10-22 18:45 GMT

மதுரை,

மதுரை ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்தி மணிகண்டன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அண்ணா மெயின் வீதியில் சந்தேகத்திற்கிடமாக வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரிடம் போலீசார் விசாரித்ததில் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 22) என்பதும், குற்றசெயல்களில் ஈடுபடுவதற்காக வாளுடன் பதுங்கி இருந்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து, வாளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்