மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

திண்டுக்கல்லில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-08-29 01:15 IST

திண்டுக்கல் லட்சுமிசுந்தரம் காலனியை சேர்ந்தவர் நாராயணன் (வயது 45). சம்பவத்தன்று இவரது வீட்டின் அருகே நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் திருட்டுபோனது. இதுகுறித்து வடக்கு போலீசில் அவர் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மோட்டார் சைக்கிளை திருடியது பாரதிபுரத்தை சேர்ந்த நாகராஜ் (20) என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்