புள்ளிமான்களை வேட்டையாடிய வழக்கில் வாலிபர் கைது

சாத்தனூர் அருகே புள்ளிமான்களை வேட்டையாடிய வழக்கில் வாலிபர் கைது ெசய்யப்பட்டார்.;

Update:2023-08-03 22:29 IST

தண்டராம்பட்டு

சாத்தனூர் அருகே 5 புள்ளிமான்கள், ஒரு காட்டுப்பன்றி ஆகியவற்றை கடந்த மாதம் 21-ந் தேதி சிலர் வேட்டையாடி கொன்றனர்.

இதையடுத்து சாத்தனூர் வனச்சரக அலுவலர் நா.சீனிவாசன் தலைமையில் வனவர்கள் முருகன், ராதா, வனக்காப்பாளர்கள் ராஜ்குமார், ரவி, சிலம்பரசன், கார்த்திகேயன் ஆகியோர் அடங்கிய குழுவினர் 3 குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில் இன்று இளையாங்கண்ணி கிராமத்தை சேர்ந்த கீரி என்ற ஜான் பீட்டர் (வயது 24) என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

இதையடுத்து மாவட்ட வன அலுவலர் அருண்லால் உத்தரவின் பேரில் அவரை தண்டராம்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்