குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்;

Update:2022-08-06 02:12 IST

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா மூங்கிக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் அஜித்(வயது 20). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா பரிந்துரையின்பேரில் திருச்சிற்றம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயா வழக்கு ஆவணங்களை கலெக்டரிடம் தாக்கல் செய்தார். இந்த ஆவணங்களை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பரிசீலனை செய்து அஜித்தை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி அஜித்தை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.





Tags:    

மேலும் செய்திகள்