போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

சிறுமியை பலாத்காரம் செய்ததாக வாலிபரை கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்.;

Update:2022-07-18 15:22 IST

செங்கல்பட்டு மாவட்டம் ஓட்டேரியை சேர்ந்தவர் 14 வயதான 9-ம் வகுப்பு மாணவி கடந்த மே மாதம் 23-ம் தேதி வீட்டில் இருந்து கடைக்கு சென்ற அவர் மாயமானார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் ஓட்டேரி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன 14 வயது சிறுமியை தேடி வந்தனர். இந்த நிலையில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே காணாமல் போன சிறுமியை ஒரு வாலிபர் அழைத்து செல்லும்போது போலீசார் மடக்கி பிடித்து சிறுமியை மீட்டு அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர் ஓட்டேரி நேரு தெருவை சேர்ந்த ஆனந்த் (வயது 21), என்பது தெரியவந்தது. மேலும் சிறுமியை அழைத்து சென்று 50 நாட்களாக பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்ததாக தெரிவித்தார். இதனையடுத்து சிறுமியை பலாத்காரம் செய்ததாக ஆனந்தை கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்