தூத்துக்குடியில் வாலிபர் வெட்டி படுகொலை - போலீசார் விசாரணை
தூத்துக்குடி முள்ளக்காடு அருகே வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்டார். கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
ஸ்பிக்நகர்,
தூத்துக்குடி முள்ளக்காடு நேருஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் இவரது மகன் அலெக்ஸ் என்ற சில்லி ( வயது 25). கடந்த வருடம் முத்தையாபுரம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ரமேஷ் என்பவர் கத்தியால் குத்தப்பட்டார்.
இது தொடர்பான வழக்கில் கொலை செய்யப்பட்ட அலெக்ஸ் என்ற சில்லி முக்கிய குற்றவாளி என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் குத்தப்பட்ட ரமேஷின் தம்பி மகேஷ் அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்துள்ளது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
கொலை நடந்த இடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மோப்பநாய் ஜூனோ வரவழைக்கப்பட்டது. சம்பவம் நடத்த இடத்திலிருந்து அருகில் உள்ள காட்டுப் பகுதி வரை சென்று திரும்பியது யாரையும் பிடிக்கவில்லை.
கொலை நடப்பதற்கு முன்பு கொலை செய்யப்பட்ட அலெக்ஸ் என்ற சில்லி மற்றும் குற்றவாளி மகேஷ் அவருடைய நண்பர்கள் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி உள்ளனர். மது அருந்தும் போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா, அல்லது ஏற்கனவே நடந்த சம்பவத்திற்கு பழிக்கு பலியாக கொலை நடந்ததா என்பது குறித்து முத்தையாபுரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.