உப்பிலியபுரம் அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை

உப்பிலியபுரம் அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2022-08-08 09:39 IST

உப்பிலியபுரம்,

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பெருமாள்பாளையம் குரும்பர் தெருவை சேர்ந்த செல்வத்தின் மகன் முருகானந்தம்(வயது21). பால் வியாபாரம் செய்து வருகிறார்.

முருகானந்தம் நேற்று மாலை பெருமாள்பாளையத்தை அடுத்துள்ள ஒட்டம்பட்டிக்கு பால் கறக்க சென்றவர். வீடு திரும்பாததால், குடும்பத்தினர் அப்பகுதியில் தேடி பார்த்துள்ளனர்.

அப்போது ஒட்டம்பட்டி ஆற்று வாரியிலுள்ள மரத்தில் தூக்கிட்டு சடலமாக தொங்குவதாக வந்த தகவலின் பேரில் உறவினர்கள் அலறியடித்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

தகவலின் பேரில் உப்பிலியபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்க அனுப்பி வைத்துள்ளனர். தற்கொலையில் காதல் விவகாரம் உள்ளதா அல்லது வேறு காரணங்கள் உள்ளதா என உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்