தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

முத்துப்பேட்டை அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2023-07-27 00:30 IST

முத்துப்பேட்டை;

முத்துப்பேட்டையை அடுத்த கீழநம்மங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவா் ரவி மகன் முருகேஷ் (வயது32). கூலித்தொழிலாளியான இவருக்கும் எடையூர் காவல் சரகம் எக்கல் வினோபா கிராமத்தை சேர்ந்த அபிராமிக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்தநிலையில் கணவன்- மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் அபிராமி கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் மனமுடைந்த முருகேஷ் வீட்டின் பின்புறம் மரத்தில் தூக்குப்போட்டு தொங்கினாா். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு முத்துப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் முருகேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இது குறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்