போலீஸ் விசாரணைக்கு சென்று வந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

போலீஸ் விசாரணைக்கு சென்று வந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்.;

Update:2022-11-22 02:16 IST

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் மடப்புரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் ராகுல்ராஜ்(வயது 22). நேற்று முன்தினம் ராகுல்ராஜை ஒரு வழக்கு தொடர்பாக திருவாரூர் அனைத்து மகளிர் போலீசார், போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணை முடிந்து வீட்டுக்கு சென்ற ராகுல்ராஜ் தனது வீட்டில் களைக்கொல்லி மருந்தை(விஷம்) குடித்து மயங்கி விழுந்தார். திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் உயிரிழந்தார். ராகுல்ராஜை போலீசார் தாக்கியதால் மனம் உடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறியும், சம்பந்தப்பட்ட போலீசாரை கைது செய்ய வலியுறுத்தியும், அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்