ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் :கலப்பு இரட்டையர் பிரிவில் கிறிஸ்டினா மிலாடெனோவிக்-இவான் டோடிக் சாம்பியன்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது.

Update: 2022-01-28 09:54 GMT

மெல்போர்ன், 

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் பிரான்சின் கிறிஸ்டினா மிலாடெனோவிச் மற்றும் குரோஷியாவின் இவான் டோடிக் இணை சாம்பியன் பட்டம் வென்றது.

‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது.

இதன் கலப்பு இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் (பிரான்சின்) கிறிஸ்டினா மிலாடெனோவிச் மற்றும் குரோஷியாவின் இவான் டோடிக் இணை  (ஆஸ்திரேலிய) ,ஜெய்மி ஃபோர்லிஸ் மற்றும் ஜேசன் குப்லெர்  இணையை எதிர்கொண்டது.

இதில் கிறிஸ்டினா மிலாடெனோவிச் மற்றும் குரோஷியாவின் இவான் டோடிக்  6-3, 6-4 என்ற செட் கணக்கில் ஜெய்மி ஃபோர்லிஸ் மற்றும் ஜேசன் குப்லெர் இணையை வீழ்த்தி  சாம்பியன் பட்டம் வென்றது.

2014 ல் மெல்போர்ன் பார்க் கலப்பு இரட்டையர் பிரிவில் டேனியல் நெஸ்டருடன் இணைந்து வென்ற மிலாடெனோவிச்சிற்கு இது இரண்டாவது பட்டமாகும்.

மேலும் செய்திகள்