இத்தாலி ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் சிட்சிபாஸ்

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியின் அரைஇறுதிக்கு சிட்சிபாஸ் தகுதி பெற்றுள்ளார்.

Update: 2022-05-13 22:21 GMT
ரோம், 

இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தலைநகர் ரோமில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் ஒலிம்பிக் சாம்பியனான அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) 7-5, 6-2 என்ற நேர்செட்டில் கிறிஸ்டியன் காரினை (சிலி) தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார். 

மற்றொரு கால்இறுதியில் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் 7-6 (7-5), 6-2 என்ற நேர்செட்டில் ஜானிக் சின்னெரை (இத்தாலி) வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தார்.

மேலும் செய்திகள்