ஈரானில் கொரோனா பாதிப்பால் மேலும் 85 பேர் பலி

ஈரானில் கொரோனாவால் மேலும் 85 பேர் உயிரிழந்ததை அடுத்து அந்நாட்டில் பலி எண்ணிக்கை 514 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-03-13 11:47 GMT
டெஹ்ரான்,

சீனாவின் உகான் நகரில் தோன்றி உலகின் 127  நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொடர்ந்து பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது.   குறிப்பாக ஈரான், இத்தாலி, தென்கொரியா ஆகிய நாடுகளில் கொரோனா வைரசின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. இந்த 3 நாடுகளிலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.

இதற்கிடையே, ஈரானில் மந்திரிகள் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கொரோனா பாதிப்புக்கு பலியாகியுள்ளனர். மேலும், பல அரசியல் தலைவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் அங்கு பொது மக்களிடையே கடும் அச்சம் நிலவி வருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்புக்கு உள்ளான ஈரானில் இன்று மேலும் 85 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 514  ஆக உயர்ந்துள்ளது.  உலகளவில் கொரோனா பாதிப்பால் இதுவரை 5,080 பேர் உயிரிழந்தனர்.  தற்போது உலகளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிகையும் 1,37,702 ஆக அதிகரித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இதுவரை 127 நாடுகளுக்கு பரவி உள்ளது.

மேலும் செய்திகள்