பொங்கல் முடிவதற்குள் பெண்களுக்கு இனிப்பான செய்தி வரும்: அமைச்சர் ஐ.பெரியசாமி

பொங்கல் பண்டிகை வரும் 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் அமைச்சர் ஐ.பெரியசாமி இவ்வாறு பேசியுள்ளார்.;

Update:2026-01-11 14:03 IST

திண்டுக்கல்,

பொங்கல் கொண்டாட்டங்கள் முடிவதற்குள் பெண்களுக்கு இனிப்பான செய்தி வரும் என்று அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார். பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகையாக மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. 1.37 கோடி பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், பொங்கல் முடிவதற்குள் இனிப்பான செய்தி வரும் என்று அமைச்சர் ஐ. பெரியசாமி கூறியிருப்பதால், மகளிர் உரிமைத்தொகை உயர்த்தப்பட இருக்கிறதா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக உள்ள ஐ. பெரியசாமி துறையின் கீழ் மகளிர் சுயஉதவி குழுக்கள், கடன் திட்டங்கள் உள்ளிட்ட பல துறைகள் வருகின்றன. எனவே, மூத்த அமைச்சராக உள்ள ஐ. பெரியசாமி தெரிவித்துள்ள இந்த தகவல் மகளிர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்