புதுக்கோட்டை: கடலுக்கு மீன் பிடிக்க சென்று மாயமான மீனவர்கள் மீட்பு
4 மீனவர்களும் 16 கடல் மைல் தொலைவில் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.;
கோப்புப்படம்
புதுக்கோட்டை,
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக கடலில் வழக்கத்தை விட அதிக வேகத்தில் காற்று வீசும் என்றும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
இதற்கிடையே, வானிலை ஆய்வு மையத்தின் அறிவுறுத்தலை மீறி புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். ஆனால் வெகு நேரமாகியும் அவர்கள் கரை திரும்பவில்லை. இதையடுத்து அவர்களின் உறவினர்கள் கொடுத்த தகவலின் பேரின் கடலோர பாதுகாப்புக் குழுமத்தினர் கடலில் தேடுதல் வேட்டை நடத்தினர்.
இந்த நிலையில், பலத்த காற்று காரணமாக படகு கவிழ்ந்ததில் 4 மீனவர்களும் கடலில் தத்தளித்துக்கொண்டு இருந்தனர். 16 கடல் மைல் தொலைவில் தத்தளித்துக் கொண்டிருந்த மூர்த்தி, மணிகண்டன், விநாயகம் மற்றும் மணி ஆகிய 4 மீனவர்களையும் கடலோர பாதுகாப்புக் குழுமத்தினர் தற்போது பத்திரமாக மீட்டுள்ளனர்.