மேகாலயாவில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு

மேகாலயாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.3 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

Update: 2021-07-09 08:53 GMT
சில்லாங்,

மேகாலயா மாநிலத்தில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அம்மாநிலத்தின் மேற்கு ஹரா ஹில்ஸ் மாவட்டத்தில் உள டுரா பகுதியில் இன்று மதியம் 2 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 4.3 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் டுரா பகுதியில் அமைந்துள்ள கட்டிடங்கள் சற்று அதிர்ந்தன. ஆனாலும், நிலநடுக்கத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

முன்னதாக, அசாம் மாநிலம் கோல்புரா பகுதியில் இன்று மதியம் 1.15 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவானது. இன்று காலை 5.56 மணியளவில் மணிப்பூர் மாநிலத்தில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்