அனுப்பிய மெசேஜ்களை எடிட் செய்யும் வசதியை விரைவில் அறிமுகம் செய்கிறது வாட்ஸ் அப்

சமூக வலைதளங்களில் முன்னணி வகிக்கும் வாட்ஸ்அப் குறுஞ்செய்தி செயலி உலக முழுவதும் உள்ள கோடிக்கணக்கானோரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தனது பயனாளர்களுக்கு அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகம் செய்து வரும் வாட்ஸ் அப் நிறுவனம் அண்மையில் வீடியோ காலிங் வசதியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.

Update: 2016-12-17 05:04 GMT
நியூயார்க்,

சமூக வலைதளங்களில் முன்னணி வகிக்கும் வாட்ஸ்அப் குறுஞ்செய்தி செயலி உலக முழுவதும் உள்ள கோடிக்கணக்கானோரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தனது பயனாளர்களுக்கு அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகம் செய்து வரும் வாட்ஸ் அப் நிறுவனம் அண்மையில் வீடியோ காலிங்  வசதியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.

இந்த நிலையில், புதியதாக வாட்ஸ் அப்பில் அனுப்ப பட்ட குறுந்தகவல்களை திருத்தம்(எடிட்) மற்றும் அழிக்கும் வசதி அறிமுப்படுத்தப்பட உள்ளதாக WABetaInfo account தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.  அந்த டுவிட்டரில், அனுப்பட்ட குறுந்தகவல்களை எடிட் செய்யும் வசதியின் செயல்பாட்டு சாத்தியம் குறித்து அறிய பீட்டா(சோதனை)முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  தற்போது இது மேம்படுத்தப்பட்டு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதியின் மூலம் அண்மையில் அனுப்பிய குறுஞ்செய்திகளை மட்டுமே எடிட் செய்ய முடியும். பழைய குறுஞ்செய்திகளை எடிட் செய்ய முடியாது.

ஐபோன் iOS 2.17.1.869 தளத்திலான போன்களில் மட்டுமே தற்போது இந்த பீட்டாவெர்ஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்தியாவில் 16 கோடிக்கும் அதிக பயனாளர்களை கொண்டுள்ள வாட்ஸ் அப், 10 இந்திய மொழிகளில் தனது சேவையை கொடுத்து வருகிறது. உலகம் முழுவதிலும் சுமார் 50 மொழிகளில் கிடைக்கிறது. உலகளவில் தினமும் 100 மில்லியனுக்கும் அதிகமான அழைப்புகள் வாட்ஸ் அப் மூலமாக மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும் செய்திகள்