உலகைச்சுற்றி

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி நாடு திரும்புவதற்கு முன்பாக கராச்சியில் உள்ள அவரது நெருங்கிய நண்பர் அலுவலகங்களில் பாகிஸ்தான் எல்லை படையினர் அதிரடி சோதனைகள் நடத்தி உள்ளனர்.

Update: 2016-12-24 20:06 GMT
* பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி நாடு திரும்புவதற்கு முன்பாக கராச்சியில் உள்ள அவரது நெருங்கிய நண்பர் அலுவலகங்களில் பாகிஸ்தான் எல்லை படையினர் அதிரடி சோதனைகள் நடத்தி உள்ளனர். அங்கிருந்து சட்டவிரோத ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது பழிவாங்கும் நடவடிக்கை என சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

* சிங்கப்பூர், மியான்மரில் இருந்து மலேசியாவுக்கு பயணிகளை ஏற்றி வந்த ஒரு பஸ், மலேசியாவின் ஜோஹார் மாகாணத்தில் பெரிய பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 14 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

* எகிப்து, ஜோர்டான் நாடுகளில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளதாக அங்குள்ள அமெரிக்கர்களை அமெரிக்கா எச்சரித்துள்ளது. மிகுந்த கவனத்துடனும், உஷாருடனும் இருக்குமாறு அவர்களை அறிவுறுத்தி உள்ளது.

* ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை தொடர்ந்து, நியூசிலாந்து, செனகல் நாடுகளில் உள்ள தனது தூதர்களை இஸ்ரேல் ஆலோசனை நடத்துவதற்காக அழைத்துள்ளது.

* ‘ஸ்டார் வார்ஸ்’ படங்களில் நடித்து பிரபலமானவர், ஹாலிவுட் நடிகை கேரி பிஷர்ஸ். அவர், லண்டன் சென்று விட்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு விமானத்தில் திரும்பிக்கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் போய் சேர்ந்ததும் உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

மேலும் செய்திகள்