சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அறக்கட்டளையை கலைக்கப்போவதாக டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப், ஜனவரி மாதம் 20–ந் தேதி பதவி ஏற்க உள்ளார். அவர் அங்கு டொனால்டு ஜே. டிரம்ப் பவுண்டேசன் என்ற பெயரில் அறக்கட்டளை நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். இந்த அறக்கட்டளை நிறுவனம்,

Update: 2016-12-25 21:42 GMT

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப், ஜனவரி மாதம் 20–ந் தேதி பதவி ஏற்க உள்ளார்.

அவர் அங்கு டொனால்டு ஜே. டிரம்ப் பவுண்டேசன் என்ற பெயரில் அறக்கட்டளை நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார்.

இந்த அறக்கட்டளை நிறுவனம், உள்நாட்டு வருவாய் சட்டத்தை மீறி 2015–ம் ஆண்டு மட்டுமல்லாது அதற்கு முன்பும் கூட தனது நிதிகளையும், சொத்துக்களையும் பயன்படுத்தியுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளதாக ‘கெய்டு ஸ்டார்’ என்ற இணையதளம் தகவல்கள் வெளியிட்டது.

இந்த அறக்கட்டளை நிறுவனத்தில் இருந்து புளோரிடா அட்டார்னி ஜெனரல் பாம் பொண்டியுடன் தொடர்புடைய ஒரு குழுவுக்கு நன்கொடைகள் தந்துள்ளதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.

இந்த புகார்கள் தொடர்பாக நியூயார்க் அட்டார்னி ஜெனரலின் விசாரணை நடக்கிறது.

இந்த நிலையில், தனது அறக்கட்டளை நிறுவனத்தை கலைத்து விடப்போவதாக டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். தான் பதவி ஏற்கிறபோது, இது தொடர்பாக எந்தவொரு கருத்து மோதலும் ஏற்பட்டுவிடக்கூடாது என கருதி இந்த நடவடிக்கையை அவர் மேற்கொள்ளப்போகிறார்.

இந்த அறக்கட்டளை நிறுவனத்தை கலைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தனது வக்கீலுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்