இலங்கை முன்னாள் பிரதமர் ரத்னஸ்ரீவிக்ரமநாயகே மரணம்

இலங்கையின் முன்னாள் பிரதமரும் முதுபெரும் அரசியல்தலைவருமான ரத்னஸ்ரீவிக்ரமநாயகே(வயது 83) உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார்.

Update: 2016-12-27 11:51 GMT
கொழும்பு,

இலங்கையின் முன்னாள் பிரதமரும் முதுபெரும் அரசியல்தலைவருமான ரத்னஸ்ரீவிக்ரமநாயகே(வயது 83) உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார்.

1970 ஆம் ஆண்டில் இருந்து  மந்திரி பொறுப்பு உட்பட முக்கிய பதவிகள் பல வகித்த விக்ரமநாயகே சில காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால், கடந்த 21 ஆம் தேதி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். 

இலங்கையின் பிரதமராக முதலில் 2000-2001 வரையும், பிறகு 2005-2010 வரையும் பதவி வகித்தார். முன்னாள் அதிபர் ராஜபக்சேவால் 2005 ஆம் ஆண்டு பிரதமராக நியமிக்கப்பட்டவர் விக்ரமநாயாக் ஆவார். இலங்கையின் சுதந்திர கட்சி தலைவராக ரஜபக்சே பொறுப்பேற்றதற்கு முக்கிய நபராக விக்ரமநாயகே இருந்தார். விக்ரமநாயகே மறைவுக்கு இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, பிரதமர் ரனில் விக்ரமசிங்கே, முன்னாள் அதிபர் ராஜபக்சே, உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்