வீடியோ: ரெயில் தண்டவாளத்தில் சிக்கி தவிக்கும் நாய் 2 நாட்களாக காப்பாற்றி வரும் மற்றொரு நாய்

உக்ரைனில் நாய் ஒன்று இரண்டு நாட்களாக ரெயில் தண்டவாளத்தில் போராடி காயமடைந்த மற்றொரு நாயின் உயிரை பாதுகாத்து வந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி நெகிழ வைத்துள்ளது.

Update: 2016-12-28 09:53 GMT
உக்ரைனில் நாய் ஒன்று இரண்டு நாட்களாக ரெயில் தண்டவாளத்தில் போராடி காயமடைந்த மற்றொரு நாயின் உயிரை பாதுகாத்து வந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி நெகிழ வைத்துள்ளது.

உக்ரைனின் ஊழ்கோறோத், தெஸ்கொவொகா கிராமத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தை டெனிஸ் என்ற நபர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோவில், ரெயிலில் அடிப்பட்டு காயமடைந்த நாய் ஒன்று நகர முடியாமல் தண்டவாளத்தில் கிடக்கிறது. அதன் அருகே மற்றொரு நாய் பாதுகாத்து வருகிறது.

திடீரென அந்த தண்டவாளத்தில் ரெயில் ஒன்று வருகிறது, ரெயிலின் சத்தத்தை கேட்ட  நாய் அடிப்பட்டு கிடக்கும் நாயின் தலையை தரையோடு தரையாக அழுத்தி பிடிக்கிறது.

இரண்டு நாய்களும் தண்டவாளத்தின் குறுக்கே கிடக்க வேகமாக வரும் ரெயில் நாய்களை பத்திரமாக கடந்து செல்கிறது. அதுமட்டுமின்றி அப்பகுதியில் கடும் பனி பொழிந்து வருகிறது.

இதுகுறித்து டெனிஸ் தனது பதிவில் கூறியதாவது, கடந்த இரண்டு நாட்களாக அந்த நாய் அடிப்பட்டுகிடக்கும் நாயை ஒவ்வொரு முறையும்  ரெயில் கடக்கும் போது பாதுகாத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு வைரலாக அதிகாரிகள் சம்பவயிடத்திற்கு விரைந்து இரண்டு நாய்களையும் மீட்டு சிகிச்சை அளித்து உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.


மேலும் செய்திகள்