பிலிப்பைன்சில் கடலுக்கடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்சில் கடலுக்கு அடியில் 7.3 ரிக்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

Update: 2017-01-10 08:33 GMT

பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜோலோ  என்ற தீவுக்கு தென்கிழக்கே, கடலில் 380 மைல் ஆழத்தில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் இந்தியப் பெருங்கடலின் அடிப்பகுதியில் புதிதாக ஏற்பட்டுள்ள பாறை அடுக்கால் தெற்காசிய பகுதிகளில் பெருமளவு நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்