சிரியாவில் ஐ.எஸ். இயக்கத்தினர் பிடியில் உள்ள முக்கிய நகருக்குள் துருக்கி படையினர் நுழைந்தனர்

சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். இயக்கத்தினர் மீது துருக்கி படைகள் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.

Update: 2017-02-12 19:39 GMT

பெய்ரூட்

சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். இயக்கத்தினர் மீது துருக்கி படைகள் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள அல் பாப் நகரம், ஐ.எஸ். இயக்கத்தினர் பிடியில் இருந்து வருகிறது. இந்த நகரத்தை ஐ.எஸ். இயக்கத்தினரிடம் இருந்து மீட்டெடுப்பதற்காக துருக்கி படையினரும், சிரியா கிளர்ச்சியாளர்களும் போராடி வருகின்றனர்.

அவர்கள் அல் பாப் நகருக்குள் நுழைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுபற்றி சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகம் நேற்று கூறுகையில், ‘‘அல் பாப் நகரின் மேற்கு புறநகர் பகுதிகளை ஐ.எஸ். இயக்கத்தினரின் பிடியில் இருந்து துருக்கி படைகளும், சிரியா கிளர்ச்சியாளர்களும் மீட்டு, தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து விட்டனர். இதில் துருக்கியின் வான்வழி தாக்குதல் முக்கிய இடம் பிடித்துள்ளது. இந்த தாக்குதலின்போது குடிமக்களில் 6 பேர் பலியாகி விட்டனர்’’ என்று தெரிவித்தது.

மேலும் செய்திகள்