டொனல்டு டிரம்ப்பிற்கு எதிராக கருத்து கொண்டுள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், லெப்டினண்ட் ஜெனரல் மெக்மாஸ்டர் மாற்றுக் கருத்தைத் தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது.

Update: 2017-02-22 10:49 GMT

லெப்டினண்ட் ஜெனரல் மெக்மாஸ்டர், ரஷ்யா, பயங்கரவாத எதிர்ப்பு, ராணுவ பலம், முக்கிய பாதுகாப்புக் கொள்கைகள் உள்ளிட்ட விவகாரங்களில் டிரம்ப்பின் கருத்துக்கு எதிர்க்கருத்தைக் கொண்டுள்ளார்.

ராணுவ நுட்பங்களில் தேர்ந்தவர் மெக்மாஸ்டர்; அவரது முடிவுகள் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காது, உணர்வுகளுக்கே இடம் கொடுக்கும் என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.

அவர் மட்டுமன்றி, அவரது நெருங்கிய நண்பர்கள் தற்காப்பு அமைச்சர் ஜிம் மேட்டிஸ், கடல்துறைத் தலைவர் ஜோசப் டன்போர்ட் ஆகியோரும் அவருக்கு ஆதரவான கருத்துக்களைக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இருப்பினும், மெக்மாஸ்டர் தமக்கு விருப்பப்பட்ட வகையில் தேசியப் பாதுகாப்புக் கட்டமைப்பை அமைத்துக்கொள்ள  டிரம்ப் ஒப்புதல் அளித்திருப்பதாக வெள்ளை மாளிகைப் செய்தி தொடர்பாளர் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்