வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் இந்திய வெளியுறவு செயலாளர் சந்திப்பு

வங்காளதேசத்திற்கு சென்றுள்ள இந்திய வெளியுறவு செயலாளர் ஜெய்சங்கர் அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்து பேசினார்.

Update: 2017-02-23 15:44 GMT
டாக்கா,

வங்காளதேச நாட்டிற்கு இந்திய வெளியுறவு செயலாளர் ஜெய்சங்கர் 2 நாள் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார்.  அவர் இன்று மதியம் தலைநகர் டாக்கா சென்றார்.

வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா அடுத்த மாதம் அல்லது ஏப்ரல் தொடக்கத்தில் இந்தியாவுக்கு வருகை தர உள்ள நிலையில் அவரை ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.

அதற்கு முன்னர், வங்காளதேச வெளியுறவு செயலாளர் முகமது ஷாகித்துல் ஹேக்கை ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பில் இரு தரப்பு உறவுகள் பற்றி இருவரும் மறுஆய்வு மேற்கொண்டனர்.  இந்த சுற்று பயணம் பற்றி மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், வங்காளதேச வெளியுறவு செயலாளர் ஹேக்கின் அழைப்பை ஏற்று ஜெய்சங்கர் அந்நாட்டிற்கு சென்றுள்ளார்.

இந்த சந்திப்பில், உயர்மட்ட அளவிலான சுற்று பயணங்கள் உளிளிட்ட இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பு விவகாரங்கள் பற்றி இரு வெளியுறவு செயலாளர்களும் மறுஆய்வு செய்திடுவார்கள் என தெரிவித்துள்ளது.

ஷேக் ஹசீனாவின் இந்திய சுற்று பயணம் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பின் முதல் முறையாக மேற்கொள்ளும் பயணமாக இருக்கும்.

மேலும் செய்திகள்