சீனாவில் 9–வது ‘பிரிக்ஸ்’ மாநாடு செப்டம்பரில் நடக்கிறது

‘பிரிக்ஸ்’ அமைப்பில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகியவை உறுப்பு நாடுகளாக உள்ளன.

Update: 2017-02-23 18:31 GMT
பீஜிங், 

‘பிரிக்ஸ்’ அமைப்பில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகியவை உறுப்பு நாடுகளாக உள்ளன. இந்த நாடுகள் பங்கேற்கும் 9–வது ‘பிரிக்ஸ்’ மாநாடு சீனாவின் ஜியாமென் நகரில் செப்டம்பர் மாதம் 3–ந் தேதி தொடங்கி 5–ந் தேதி வரை நடக்கிறது.

உறுதியான நட்பு; பிரகாசமான எதிர்காலம் என்பதை அடிப்படையாக கொண்டு இந்த ஆண்டு மாநாடு நடைபெற உள்ளது. ‘பிரிக்ஸ்’ உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்புடன் இந்த மாநாடு அதன் குறிக்கோளை வெற்றிகரமாக அடையும் என சீன அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்