சர்ச்சைக்குரிய தென் சீனக்கடலில் நீருக்கடியில் கண்காணிப்பு தளம் அமைக்க சீனா முடிவு

சர்ச்சைக்குரிய தென் சீனக்கடலில் நீருக்கடலியில் கண்காணிப்பு தளம் அமைக்க சீனா முடிவு செய்துள்ளது.

Update: 2017-02-28 07:31 GMT
பெய்ஜிங்,

சீனாவின் தென்பகுதியில், பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியாக அமைந்துள்ள தென் சீனக்கடலில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உலகின் மூன்றில் ஒரு பகுதி கப்பல் போக்குவரத்து, இந்தப் பகுதி வழியே நடைபெறுவதாலும், இந்த கடலில் அடிப்பகுதியில் எண்ணெய், இயற்கை எரிவாயு வளம் இருப்பதாக சொல்லப்படுவதாலும் இது முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆனால், ‘‘தென்சீனக் கடலில் எங்களுக்கும் பங்கு இருக்கிறது’’ என்று பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, புருனை, தைவான் போன்ற நாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றன. ஆனால், இந்தப்பகுதி முழுவதும் தங்களுக்கே சொந்தம் என்று சீனா கூறி வருகிறது. 

தென் சீனக்கடல் விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுடனும் சீனா மோதல் போக்கை கையாண்டு வருகிறது. இந்த நிலையில், தென் சீனக்கடலில் கண்காணிப்பு தளம் ஒன்றை அமைக்க சீனா முடிவு செய்துள்ளது.  இந்த தளம் இருந்து நீருக்கடியில் உள்ள நடப்பு நிலவரத்தை கண்காணிக்கும் நோக்கத்துடன் அமைக்கப்படுகிறது. ஆனால், இந்த கண்காணிப்பு தளம் தென் சீனக்கடலில் எந்த இடத்தில் அமைக்கப்படுகிறது என்பது குறித்த தகவலை வெளியிடப்படவில்லை. 

மேலும் செய்திகள்