இந்திய ஹேக்கர்களை உளவுக்கு பயன்படுத்திய ஸ்காட்லாந்து யார்ட் - அதிர்ச்சி செய்தி

இங்கிலாந்தின் காவல்துறை செயல்பாடுகளை கண்காணிக்கும் அமைப்பிற்கு வந்த ஒரு மர்மக் கடிதம் ஸ்காட்லாந்து யார்ட் போலிஸ் இந்திய ஹேக்கர்களை தங்களது உளவு வேலைகளுக்கு பயன்படுத்தியதாக புகார் செய்துள்ளது.

Update: 2017-03-22 11:17 GMT
லண்டன்,

இந்த விவகாரத்தை அறிந்த 'தகவல் கடத்தி’ ஒருவர் லண்டன் மாநகர காவல்துறையிலுள்ள ரகசிய பிரிவு ஒன்று பல வருடங்களாக இந்திய காவல்துறையினரின் உதவியோடு முக்கிய இதழியலாளர்கள் உட்பட பலரது மின்னஞ்சல் கடவு சொற்களை திருடி தொடர்புடையவர்களின் தகவல்களை உளவு பார்த்துள்ளனர்.

இங்கிலாந்தின் பசுமை கட்சியின் முன்னாள் தலைவர் ஒருவருக்கு பல பிரபலங்களின் மின்னஞ்சல் கடவு சொற்கள் மின்னஞ்சல் ஒன்றின் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. 

பிரபல இங்கிலாந்து இதழான ‘தி கார்டியன்’னின் இரு நிருபர்களின் கடவு சொற்களும் இந்த மின்னஞ்சலில் இருந்துள்ளது. இரு நிருபர்களும் தங்களுடைய கடவு சொல்லை உறுதிபடுத்தியுள்ளனர். 

ஸ்காட்லாந்து யார்ட் காவல்துறைக்கு உதவ இந்திய காவல்துறை அதிகாரிகள் ஹேக்கர்கள் சிலரை பணியமர்த்தியுள்ளனர். ஹேக்கர்களே கடவு சொற்களை திருடியுள்ளனர். பசுமை கட்சியின் முன்னாள் தலைவரோ எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியாததால் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த விசாரணையை காவல்துறை செயற்பாடுகளை கண்காணிக்கும் அமைப்பே துவங்கியுள்ளது.

மேலும் செய்திகள்