அமெரிக்காவில் 3 வயது குழந்தையை மீட்க உதவி ஹீரோவான நாய்

அமெரிக்காவில் ஆற்றோரம் அநாதையாக கிடந்த 3 வயது பெண் குழந்தையை மீட்பதற்கு உதவிய நாய் ஒன்று அந்த பகுதியின் ஹீரோவாகியுள்ளது.

Update: 2017-03-23 12:50 GMT
வாஷிங்டன்,

அமெரிக்காவில் டெல்டா என்ற பெயரில் விலங்குகள் காப்பகம் ஒன்று அமைந்துள்ளது.  இங்கு கடந்த ஏப்ரலில் 2 வயது நிறைந்த பெட்டுனியா என்ற பெண் நாய் வந்துள்ளது.  அதனை வளர்த்தவரால் தாக்கப்பட்டு 2 கால்களும் மற்றும் இடுப்பு உடைந்தும் அது கொண்டு வரப்பட்டுள்ளது.

அதன்பின் சிகிச்சையால் உடல் நலம் பெற்ற இதனை வேறு ஒரு குடும்பம் எடுத்து வளர்த்து வருகிறது.  அதற்கு பீனட் என்றும் அவர்கள் பெயரிட்டுள்ளனர்.  அந்த குடும்பத்தின் பெண் உறுப்பினர் தனது பெயரை வெளியிடாமல் விலங்குகள் காப்பகத்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், எனது கணவர் வீட்டிலிருந்து பீனட்டை அழைத்து கொண்டு வெளியே சென்றுள்ளார்.  அது வீட்டின் பின்புறத்திற்கு வேகமுடன் ஓடி சென்றது.  அதனை எனது கணவர் பின் தொடர்ந்துள்ளார்.  அங்கு ரேபிட் ஆற்றின் அருகே ஆச்சரியப்படும் வகையில், குளிரில் நடுங்கியபடி, ஆடையின்றி, பந்து ஒன்றில் கட்டப்பட்ட நிலையில் 3 வயது பெண் குழந்தை ஒன்று கிடந்துள்ளது.

இதனை அடுத்து அந்த குழந்தையை, தனது சட்டையால் எனது கணவர் சுற்றி எடுத்து வீட்டிற்கு கொண்டு வந்துள்ளார்.  அதன்பின் ஆம்புலன்ஸ் மற்றும் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.  எங்களுக்கு மட்டுமின்றி மற்றவருக்கும் பயன்படும் வகையில் உதவியாக இருந்துள்ளது பீனட்.  உங்களை போன்ற நபர்களால் பீனட் உயிருடன் உள்ளது என நெகிழ்ச்சியுடன் எழுதியுள்ளார்.

மேலும் செய்திகள்