உலகைச் சுற்றி....

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து கடற்கரை நகரை இன்று (செவ்வாய்க்கிழமை) ‘டெபி’ என்ற பயங்கர சூறாவளி தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Update: 2017-03-27 19:37 GMT
* ரஷியாவில், ஊழல்குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்று பிரதமர் டிமிட்ரி மெத்வடேவ் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி தலைநகர் மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பர்க், நேவாசிபிரிஸ்க் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். மாஸ்கோவில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்ட எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னியை போலீசார் கைது செய்தனர். மேலும் நாடு முழுவதும் 500–க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

* இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள அந்நாட்டின் பாராளுமன்றத்துக்கு வெளியே கடந்த 22–ந் தேதி, பயங்கர தாக்குதல் நடத்தி ஒரு போலீஸ்காரர் உள்பட 4 பேரை கொலை செய்த பயங்கரவாதியை ஸ்காட்லாந்து போலீசார் சுட்டுக்கொன்றனர். இந்த தாக்குதலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 30 வயது நபர் ஒருவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

*உக்ரைன் நாட்டில் டோனெஸ்க் பிராந்திய பகுதியில் உள்ள மலைன்விகா என்ற கிராமத்துக்கு அருகே வானில் பறந்துகொண்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று எதிர்பாராதவிதமாக மின்கம்பத்தின் மீது மோதி, தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

* சிரியாவில், ராக்கா மாகாணத்தில் தப்கா நகரில் உள்ள ராணுவ விமானதளத்தை ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். நீண்டகால போராட்டத்திற்கு பின் நேற்று முன்தினம் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை அந்த விமானநிலையத்தை ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து முழுமையாக மீட்டது.   

* ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து கடற்கரை நகரை இன்று (செவ்வாய்க்கிழமை) ‘டெபி’ என்ற பயங்கர சூறாவளி தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அப்போது மணிக்கு 240 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என கூறப்பட்டு இருக்கிறது. இதனை தொடர்ந்து 3,500–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்
களுக்கு இடம்பெயர்ந்து உள்ளனர்.  

மேலும் செய்திகள்