அமெரிக்காவில் விபத்தை ஏற்படுத்தி விட்டு ஓட்டுநர் தப்பி ஓட்டம்: இந்திய வம்சாவளி என்ஜினியர் பலி

அமெரிக்காவில் தாறுமாறாக வந்த மினிவேன் மோதியதில் இந்திய வம்சாவளி என்ஜினியர் பலியானார். அவரது மனைவி படுகாயம் அடைந்தார்.

Update: 2017-03-29 12:25 GMT
வாஷிங்டன்,

அமெரிக்காவில் ஏற்பட்ட விபத்தில் இந்திய வம்சாவளியைச்சேர்ந்த என்ஜினியர் பலியாகியுள்ளார்.அமெரிக்காவின் கொலம்பஸ் நகரத்தின் அருகாமையில் உள்ள பார்த்லோமி கவுண்டி பகுதியில் உள்ள ஒரு சாலையின்  ஓரமாக இந்திய வம்சாவளியைச்சேர்ந்த அன்சுல் சர்மா மற்றும் அவரது மனைவி சமிரா பரத்வாஜ் ஆகியோர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக வந்த மினிவேன் ஒன்று இருவர் மீதும் மோதி விட்டு நிற்காமல் சென்றது. 

இந்த கோர விபத்தில் என் ஜினியரான அன்சுல் சர்மா(வயது 30) சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். அவரது மனைவி படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்தையடுத்து வாகனத்தை தாறுமாறாக ஓட்டி விபத்தை ஏற்படுத்திய மைக்கேல் டெமியோ (வயது 36) என்ற என்ற அமெரிக்கர் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விபத்தில் பலியான அனுல் ஷர்மா உடலை இந்தியாவுக்கு கொண்டும் வரும் பணியில் அவரது உறவினர்கள் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் அனுல் ஷர்மாவின் மனைவியும் உடலுக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுவதால் உடலை இந்தியா கொண்டுவருவதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்