தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக அமெரிக்காவில் தமிழர்கள் போராட்டம்

தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக அமெரிக்காவில் உள்ள தமிழர்கள் வாஷிங்டனில் போராட்டம் நடத்தினர்.

Update: 2017-04-10 21:45 GMT
வாஷிங்டன்,

தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் பல நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக அமெரிக்காவில் உள்ள தமிழர்கள் வாஷிங்டனில் போராட்டம் நடத்தினர். அமெரிக்காவில் பல்வேறு பகுதிகளில் உள்ள தமிழர்கள் ஏராளமானோர் இந்திய தூதரகம் முன்பு, தப்பு அடித்தும், முழக்கங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது விவசாயக்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், மீத்தேன், ஹைட்ரோ–கார்பன் உள்ளிட்ட திட்டங்களை கைவிட வேண்டும், வறட்சி நிவாரண தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

பின்னர் தமிழர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் ஒன்று நடத்தப்பட்டது. பின்னர் அந்த மனுவை பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு அவர்கள் அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்