எகிப்தில் 3,500 வருட பழமை வாய்ந்த கல்லறையில் 6 மம்மிகள் கண்டெடுப்பு

எகிப்து நாட்டில் 3 ஆயிரத்து 500 வருட பழமை வாய்ந்த கல்லறையில் இருந்து 6 மம்மிகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

Update: 2017-04-18 13:29 GMT
லக்சர்,

எகிப்து நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்த நகரம் லக்சார்.  இங்கு அந்நாட்டு தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தனர்.  இதில் 3 ஆயிரத்து 500 வருடங்கள் பழமை வாய்ந்த கல்லறை ஒன்றில் இருந்து 6 மம்மிகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

அவற்றுடன் மரத்தினாலான வண்ணமிகு பெட்டிகள் மற்றும் ஆயிரத்திற்கும் கூடுதலான இறுதி சடங்குகளுடன் தொடர்புடைய சிலைகளும் இருந்துள்ளன. 

இதுபற்றி தொல்பொருள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில், பிரபலம் வாய்ந்த வேலி ஆப் தி கிங்ஸ் என்ற பகுதி அருகே டிரா அபுல் நகா நெக்ரோபோலிஸ் என்ற இடத்தில் இந்த கல்லறை கண்டறியப்பட்டது.  இது நகர நீதிபதியாக இருந்த ஒருவருக்கு உரியது என தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்