அமெரிக்காவில் ரஷிய எம்.பி. மகனுக்கு 27 ஆண்டு சிறை

ரஷிய நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் வெலேரி செலிஸ்னெவ். இவரது மகன் ரோமன் செலிஸ்னெவ் (வயது 32). இவர் 2014-ம் ஆண்டு மாலத்தீவில் கைது செய்யப்பட்டார்.

Update: 2017-04-22 21:30 GMT
வாஷிங்டன், 

இது சட்டவிரோத நடவடிக்கை என ரஷியா கருத்து தெரிவித்தது.

ஆனால் அவர் அமெரிக்காவில் பெரிய அளவில் இணைய தாக்குதல் நடத்திய வழக்கில் தொடர்புடையவர் என கூறப்படுகிறது.

இது தொடர்பாக வாஷிங்டன் மேற்கு மாவட்ட மத்திய கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், ரோமன் செலிஸ்னெவ், அமெரிக்க வர்த்தக நிறுவனங்களின் கம்ப்யூட்டர்களில் சட்ட விரோதமாக ஊடுருவி இணைய தாக்குதல் நடத்தியது நிரூபிக்கப்பட்டது.

இதையடுத்து அவருக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து, வாஷிங்டன் மேற்கு மாவட்ட மத்திய கோர்ட்டு நீதிபதி ரிச்சர்ட் ஜோன்ஸ் அதிரடி தீர்ப்பு வழங்கினார்.

அமெரிக்க ரகசிய போலீஸ் படையினர் பல ஆண்டு காலம் புலனாய்வு நடத்தி இந்த வழக்கில் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்