இந்தியாவிடம் வாலாட்டும் பாகிஸ்தானை சுழற்றியடிக்கும் அண்டைய நாடுகள், இப்போது ஈரான் எச்சரிக்கை

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் புகழிடங்கள் மீது தாக்குதலை நடத்துவோம் என ஈரான் கடும் எச்சரிக்கையை விடுத்து உள்ளது.

Update: 2017-05-08 12:51 GMT

தெக்ரான்,

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளை கொண்டு பாகிஸ்தான் மறைமுகமான போரில் ஈடுபட்டு வருகிறது. இந்தியா பலமுறை எச்சரித்தும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்வதை நிறுத்தியது கிடையாது. ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்தும் தலிபான்களுக்கு பாதுகாப்பு புகழிடம் வழங்குகிறது பாகிஸ்தான். இந்தியாவிற்கு எதிராக லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்களை பாகிஸ்தான் ராணுவமே தயார் செய்கிறது. உலக நாடுகள் எச்சரிக்கையை மீறி பாகிஸ்தான் இதனை செய்து வருகிறது. 

பெஷாவர் தாக்குதலை அடுத்து பயங்கரவாதத்திற்கு எதிரான ஆப்ரேஷன் ஒன்றை தொடங்கியது. இருப்பினும் பாகிஸ்தானிலும் தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

பாகிஸ்தான் கிழக்கு எல்லையை ஈரானுடன் பகிர்ந்துக் கொண்டு உள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் இந்திய பகுதியில் மட்டும் தன்னுடைய வேலையை காட்டிவந்த பாகிஸ்தான், ஈரான் பகுதியில் மட்டும் பதுங்கியது. இந்நிலையில் கடந்த மாதம் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஈரானில் நடத்திய தாக்குதலில் 10 ஈரான் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். இது ஈரானை கடும் கோபம் அடைய செய்து உள்ளது. பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ் அல் அத்ல் என்ற பயங்கரவாத இயக்கம்தான் தாக்குதல் நடத்தியதாக ஈரான் கூறிஉள்ளது.

பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தும் என நாங்கள் நம்புகிறோம் என கூறிஉள்ள ஈரான் இல்லையெனில் நாங்கள் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்து உள்ளது.

ஈரானும் பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாத தாக்குதலால் இப்போது பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.

ஈரான் ராணுவ மேஜர் ஜெனரல் முகமது பக்ரி பேசுகையில், “இப்போது நிலவும் சூழ்நிலையை ஏற்றுக் கொள்ள முடியாது. பாகிஸ்தான் எல்லை நிலவரத்தை கட்டுப்படுத்தும் என எதிர்பார்க்கிறோம். பயங்கரவாதிகளை கைது செய்யும், பயங்கரவாத முகாம்களை மூடும் என நம்புகிறோம். பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்தால், பாகிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் பயங்கரவாத புகழிடங்கள் மீது நாங்கள் தாக்குதல் நடத்துவோம், பயங்கரவாதிகள் எங்கிருந்தாலும் தாக்குதல்தான் நடக்கும்,” என கூறிஉள்ளார். 

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையிலும் மோசமான சூழ்நிலையே நிலவுகிறது. ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு புகழிடம் அளிப்பதை எதிர்க்கிறது. சமீபத்தில் இருநாட்டு ராணுவம் இடையே அவ்வபோது துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்