ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு பாலியல் அடிமைகளாக 20,000 ஆடுகளை விற்றவர் கைது

ஒருவர் 20,000 ஆடுகளை பாலியல் அடிமைகளாக சிரியாவில் உள்ள ஐ.எஸ் தீவிரவாத குழுவிடம் விற்றுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Update: 2017-05-22 05:51 GMT
நியூசிலாந்தை சேர்ந்த விவசாயி  ஆலன் செய்மூர் (வயது 52). இவர் சிரியாவில் ஐ.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு ஆடுகளை அனுப்பி வந்ததை கண்டறிந்த சிஐஏ மற்றும் எம்ஐ6 அதிகாரிகள், நியூசிலாந்து அதிகாரிகளிடம் இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆலன் செய்மூர் ஆடுகளின் மூலம் ஆயுதங்களை கடத்துவதாக சந்தேகம் அடைந்த சுங்க அதிகாரிகள் ஆடுகளை சோதனை செய்து பார்த்ததில் எந்த ஆதாரமும் சிக்கவில்லை.

இந்நிலையில் ஆடுகளை உணவிற்காக பயன்படுத்தாத ஐ.எஸ் தீவிரவாதிகள், அதை பாலியல் அடிமைகளாக பயன்படுத்தி வந்ததை சிஐஏ மற்றும் எம்ஐ6 அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

இதனையடுத்து  ஆடுகளை அனுப்பி வந்த விவசாயியை நியூசிலாந்து அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆண்டு மட்டும் ஆலன் செய்மூர்  20,000 ஆடுகளை ஐ.எஸ் அமைப்பிற்கு விற்றுள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகள்