எனது முதல் பட்ஜெட் ‘புதிய அமெரிக்காவுக்கான அடித்தளமாக அமையும்’; டொனால்டு டிரம்ப் உறுதி

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியான டொனால்டு டிரம்ப், வாரந்தோறும் வானொலி மற்றும் இணையதளம் மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

Update: 2017-05-27 21:45 GMT

வாஷிங்டன்,

அவரது சமீபத்திய உரையில் தனது அரசின் முதல் பட்ஜெட் குறித்து பேசினார். இந்த பட்ஜெட் புதிய அமெரிக்காவுக்கான அடித்தளமாக அமையும் என அப்போது அவர் உறுதியளித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘அமெரிக்காவின் உன்னதத்தை எட்டவும், நாட்டின் எதிர்கால பொருளாதார வளத்துக்காகவும், எனது நிர்வாகம் புதிய அடித்தளத்தை அமைத்து வருகிறது. அந்தவகையில் எனது நிர்வாகம் தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட், அமெரிக்க தொழிலாளர்களுக்கு லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளுக்கான பாதையை உருவாக்குவதுடன், பொருளாதார தேக்க நிலையையும் மாற்றும்’ என்றார்.

தனது பட்ஜெட்டில் சமூக பாதுகாப்பு மற்றும் மருத்துவ திட்டங்களுக்கு நிதி குறைக்கப்படாது என்று கூறிய டிரம்ப், நமது நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக மக்கள் வீடுகளில் மேற்கொள்வது போல முன்னுரிமைகளை அமைத்தல், தேவையற்றதை குறைத்தல், புதிய வாய்ப்புகளை வளர்த்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். கவனமும், பாதுகாப்பும் இல்லாமல் பொருளாதார வளர்ச்சி சாத்தியமாகாது என்றும் டிரம்ப் கூறினார்.

மேலும் செய்திகள்