பிரபல ஐடி நிறுவனமான இன்போஸிஸ் மீது அமெரிக்காவில் வழக்கு

பிரபல ஐடி நிறுவனமான இன்போஸிஸ் மீது அமெரிக்காவில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

Update: 2017-06-22 09:03 GMT
பெங்களூரு,

பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போஸிஸ் தெற்காசிய நாட்டைச்சாராதவர்களுக்கு எதிராக பாரபட்சத்துடன் செயல்படுவதாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.  இன்போஸிஸ் நிறுவனத்தின் முன்னாள் குடியேற்ற பிரிவு தலைவர் இந்த வழக்கை  அமெரிக்க நீதிம்ன்றத்தில் தொடுத்துள்ளார்.  வழக்கைத் தொடர்ந்த எரிக் கிரீன் என்பவர் 2011 அக்டோபரில் இன்போசிஸ் நிறுவனத்தில் சேர்ந்து 2016 ஜூன் 28 வரை பணியாற்றியுள்ளார்.

டெக்சாஸ் கிழக்கு மாவட்ட கோர்ட்டில் தொடந்த வழக்கில், இன்போசிஸ் நிர்வாகம் தெற்காசியர்களுக்கு சாதகமாக செயல்படுகிறது, தெற்காசியர்கள் அல்லாதவர்களை பாகுபாட்டுடன் வேண்டுமென்றே நடத்துகிறது. அதாவது வேலைக்குத் தேர்வு செய்வது முதல், பதவி உயர்வு, சம்பளம், வேலையை விட்டு அனுப்புவது ஆகியவற்றில் தெற்காசியரல்லாதாருக்கு கடுமையான பாரபட்சம் காட்டியது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை கில்கோர் & கில்கோர் என்ற சட்ட நிறுவனம் கீரினுக்காக எடுத்துச்சென்று வாதாட உள்ளது. 

இந்த குற்றச்சாட்டு குறித்து இன்போசிஸ் நிறுவனத்தைத் தொடர்பு கொண்ட போது, “வழக்கில் இருக்கும் விவகாரம் பற்றி கருத்து கூறுவதற்கில்லை” என்று கூறிவிட்டது. ஏற்கெனவே எச்1பி விசா நடைமுறைகளை இன்போசிஸ் முறைகேடு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், மேற்கண்ட  குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.  கீரீன் தனது  மனுவில் இன்போசிஸ் நிறுவனத்தின் வாசுதேவ நாயக், வினோத் ஹம்பாபுர் ஆகியோர் மீது குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

டிரம்ப் நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்காவில் புதிதாக நான்கு செண்டர்களையும் 10 ஆயிரம் அமெரிக்கர்களையும் பணியமர்த்தப்போவதாக  இன்போஸிஸ் நிறுவனம் தெரிவித்து இருந்த நிலையில், இன்போஸிஸ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்